அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (குசராத்)அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதி என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் முதன்முதலில் 2009-இல் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி மக்களவை உறுப்பினர் ஆனார். 2024ஆம் ஆண்டின் சமீபத்திய தேர்தல்களின் படி, தினேசு மக்வான இந்தத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளார்.
Read article